Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துணிவு படத்திற்கு போன ரசிகர் உயிரிழப்பு! நடிகர் அஜித் மீது புகார்!

Advertiesment
துணிவு படத்திற்கு போன ரசிகர் உயிரிழப்பு! நடிகர் அஜித் மீது புகார்!
, வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:38 IST)
துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அஜித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் துணிவு படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் அங்கு சென்ற டேங்கர் லாரி மீது ஏறி ஆடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் பார்க்க சென்ற இளைஞர் பரத் மரணத்திற்கு நடிகர் அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என புகாரளித்துள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியாவின் 47 ஆண்டுக்கால ஏக்கம் முடிவுக்கு வருமா?