Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டாவது நாளிலும் வசூலில் முந்தும் துணிவு…!

இரண்டாவது நாளிலும் வசூலில் முந்தும் துணிவு…!
, வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:13 IST)
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளன.

2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் வெளியாகின. இதில் முதல் நாளில் துணிவு படம், வாரிசு திரைப்படத்தை விட பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாளில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குக் கூடுதல் வசூல் கிடைத்தது.

துணிவு தமிழகத்தில் முதல்நாளில் 21 கோடி ரூபாய் அளவுக்கும், வாரிசு திரைப்படம் 20 கோடி ரூபாய் அளவுக்கும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இரண்டாம் நாளும் இதே ட்ரண்ட் தொடர்ந்துள்ளது. இரண்டாம் நாளிலும் துணிவு படமே தமிழகத்தில் வசூலில் முந்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் உலகளவிலும் துணிவு படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகமா? தமிழ்நாடா? – எனக்கு இப்படி சொல்லதான் ஆசை – லோகேஷ் கனகராஜ் பதில்!