முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக சட்டமன்றம் என்பது கலகலப்பு மன்றமாக மாறி வருகிறது. தினந்தோறும் கூச்சல், குழப்பம் மற்றும் வெளிநடப்பு என்று இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக சட்டசபை கூடியதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துகுடி சம்பவம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் இந்த தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையில் திமுக சட்டப்பேரவையில் பங்கேற்காதுன்று கூறி வெளிநடப்பு செய்தார் மு.க. ஸ்டாலின். அவருடன் திமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தவிருபப்தாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்துவது திமுகவுக்கு புதியது இல்லை. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு வெளியே போட்டி சட்டமன்றத்தை திமுகவினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.