சூர்யாவுக்கு என்றும் துணை நிற்போம்..! – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:17 IST)
ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யா மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை சூர்யா நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தில் மீண்டும் Gen Z இளைஞர்கள் போராட்டம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. கடைசி நேரத்தில் டிரம்புக்கு பரிந்துரை செய்த உக்ரைன் அதிபர்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தவெகவின் இன்னொரு மாவட்ட செயலாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments