Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீர் பங்கீட்டு முறையை கொண்டு வரவேண்டும் - நல்லசாமி

நீர் பங்கீட்டு முறையை கொண்டு வரவேண்டும் -  நல்லசாமி
, செவ்வாய், 4 ஜூன் 2019 (20:06 IST)
காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் நாள்தோறும் நீர் பங்கீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று கரூரில் கீழ்பவானி விவசாயிகள் நலசங்கத்தின் தலைவரும், கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்த மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற உள்ள கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு மாநாட்டு மலரை வெளியிட்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ”தற்போது உள்ள நிலையில் மாதந்திர அடிப்படையில் தமிழகத்திற்கும், பாண்டிசேரிக்கும் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று தீர்ப்பில் இடம்பெற்றிருக்குவரை இந்த தீர்ப்பை நடைமுறைபடுத்திவிடமுடியாது, இதனால் கர்நாடகவில் காவிரி நீர் வடிகாலாகவே மாறிவிடும். கர்நாடகவில் உள்ள நான்கு அணைகளில் உள்ள குடிநீர் எங்களுக்கு போதாது என்று நீர்வளத்தறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
பருவமழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடமுடியும். பெட்ரோல் டீசல் விலையை எவ்வாறு தினத்தோறும் அறிவிக்கிறதோ அதே போல் நாள்தோறும் நீர்பங்கீட்டு முறையை நடைமுறைபடுத்திருந்தால் அமைச்சர் இவ்வாறு பேசியிருக்கமாட்டார். 
 
2018 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் கர்நாடகா அணை நிரம்பி, மேட்டூர் அணை நிரப்பி 170 டி.எம்.சி., நீர் கடலில் கலந்தது. உடனடியாக இந்த தீர்பை திருத்தவதற்காக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
தமிழகத்தில் இரண்டாவது அணை கீழ்பவானி அணை. இந்த காவரி மேலாண்மை தீர்ப்பு, விதிமுறை என்று கடந்த 60 ஆண்டுகள் பின்பற்றவில்லை.  நிர்வாகத்தில் தவறுகள் கலையபடவேண்டும் என்பற்காக அடுத்த மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை ரம்ஜான் : ஹாஜி அறிவிப்பு