கல்லூரிகள் திறப்பு குறித்து 2 நாட்களில் முடிவெடுக்கவுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்தவகையில் வழிபாட்டு தளங்கள், பள்ளிகள் திறந்துள்ளதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெற்றுவருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.