Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவுலர்களை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ்: அம்பானியின் ப்ளான் என்ன?

பவுலர்களை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ்: அம்பானியின் ப்ளான் என்ன?
, வியாழன், 21 ஜனவரி 2021 (08:51 IST)
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து விடுவித்துள்ளது. 

 
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் போட்டி கொரோனா வைரஸ் பரபரப்பில் முடிந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. 
 
இந்த ஆண்டு மேலும் ஒன்று அல்லது இரண்டு அணிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் முக்கிய வீரர்களை விடுவித்ததாக செய்திகள் வெளிவந்தன. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 7 வீரர்களின் ஒப்பந்தத்தை முடித்து விடுவித்துள்ளது. நாதன் கவுண்டர் நைல்,  மிட்சல் மெக்லாங்கன், லசித் மலிங்கா, ஜேம்ஸ் பட்டின்சன், பிரின்ஸ் பல்வாண்ட் ராய், டிக்விஜய் தேஷ்முக், சர்ஃபேன் ருத்தர்போட் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
குறிப்பாக பவுலர்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதால் அடுத்து ஏலத்தின் போது யார் யார் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ஆஸ்திரேலிய தொடர் – இரு நாட்டு பிரதமர்களின் டிவிட்டர் உரையாடல்!