Publish Date: Sun, 29 Aug 2021 (13:23 IST)
Updated Date: Sun, 29 Aug 2021 (13:26 IST)
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் கோவையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்த நிலையில் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்த நிலையில் கேரளாவும் தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கேரளாவிற்கு அருகில் உள்ள தமிழக மாவட்டமான கோயம்புத்தூரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு வாரம் முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். 50 பேர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.