Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆழ்துளை கிணறுகளை மூடுங்கள்: கலெக்டர்கள் உத்தரவு

ஆழ்துளை கிணறுகளை மூடுங்கள்: கலெக்டர்கள் உத்தரவு

Arun Prasath

, சனி, 26 அக்டோபர் 2019 (11:17 IST)
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடரும் நிலையில், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.40 மணி அளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் தவறி விழுந்தத்தை தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 129 அடி ஆளமுள்ள கிணற்றில் குழந்தை 70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டதை அடுத்து 6 ஆவது குழு மீட்புபணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியானது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.

முன்னதாக சுஜித்தின் மேல் மண் மூடியிருந்த நிலையில் தற்போது மண்ணை அகற்றி ஒரு கருவியால் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தை அசைவின்றி உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து, பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளின் அபாயத்தை உணர்ந்து அவற்றை உடனடியாக மூடும்படி வேலூர், கடலூர், தேனி மாவாட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக பல குழந்தைகள் இவ்வாறு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மரணித்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக உள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆழ்துளை கிணறில் அசைவின்றி குழந்தை..