கோவையில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “கோவை +2 மாணவி பொன்தாரணியின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது. தாய்க்கு ஆறுதல் கூற வார்த்தைகளில்லை . காவல்துறையின் விரைவான பாரபட்சமில்லா நடவடிக்கை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.