கோவையில் காந்தி நினைவு நாளான இன்று நடத்தப்பட்ட உறுதி ஏற்பு விழாவில் கோட்சே பெயரை பயன்படுத்த போலீஸார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்று இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கோவையில் காந்தி நினைவு நாளையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் உறுதி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் கோட்சே, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்பட்டதற்கு காவல்த்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் எழுந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.