Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் மீண்டும் முழுஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கோவையில் மீண்டும் முழுஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
, ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (08:23 IST)
கோவையில் மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஆகவே கருதப்படுகிறது
 
கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவையில் உள்ள மருந்து கடைகள், பால் கடைகள் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கோவையில் உள்ள முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை என்றும் அத்தியாவசியமான கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் கோவையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி என்றும் சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை என்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கேரள மாநில எல்லையில் இருந்து கோவை வருபவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள் என்றும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்டா வைரஸ் 1000 மடங்கு ஆபத்தானது: அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை!