Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை விட கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (18:49 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவிய நாளிலிருந்தே சென்னையில் தான் மிக அதிக பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் குறைந்து உள்ளது. அதற்கு பதிலாக கோவையில் கடந்த சில நாட்களாக சென்னையை விட அதிக கொரோனா பாதிப்பு இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றும் கூட சென்னையில் 1530 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 1,000 பேர்களுக்கும் அதிகமாக கோவையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 2564 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை பாதிப்பை விட அதிகமாக கொரோனா பாதித்த நகரமாக ஈரோடு நகரமும் தற்போது இணைந்துள்ளது.
 
இன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து நகரங்களில் இதோ:
 
கோவை - 2,564
 
ஈரோடு - 1,646
 
சென்னை - 1,530
 
திருப்பூர் - 1,027
 
சேலம் - 997
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

வந்துவிட்டது Gemini Live.. வேற லெவலில் யோசித்த Google.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் AI chatbot..!

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments