தமிழகத்தில் இன்று 19448 பேர்களுக்கு கொரோனா

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (18:42 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 19,448 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 19,448 பேர்களில் 1,530 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 351 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 27,356 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 31,360 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 19,97,299 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,70,838 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 288,92,497  என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments