ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

Mahendran
வெள்ளி, 4 ஜூலை 2025 (10:37 IST)
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத், சேலத்தை சேர்ந்த பிரதீப்குமார், மற்றும் சென்னையை சேர்ந்த கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கெவின் அளித்த வாக்குமூலம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கெவின் தனது வாக்குமூலத்தில், கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர்தான் தங்களுக்கு கோகைன் சப்ளை செய்தார் என்றும், எவ்வளவு தேவை என்பதை சில நாட்களுக்கு முன்னதாகவே பிரதீப்குமார் மூலம் தெரிவித்துவிட்டால், அவர் பிரசாத் வாயிலாக தங்களுக்கு கோகைன் அனுப்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், "நானும் பிரசாத்தும் சேர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மூலம் பிரபல நடிகர், நடிகைகளுக்கு கோகைன் விற்பனை செய்துள்ளோம். எங்களிடமிருந்து ₹7,000-க்கு கோகைனை வாங்கிய ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அதை ₹15,000-க்கு விற்பனை செய்வார்கள்" என்றும் கெவின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மூலம் எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு கோகைன் விற்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டால், பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுவது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments