68 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:51 IST)
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் 68 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 
 
கடந்த 19ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் இருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments