Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதி துணை முதல்வரானாலும் ஆச்சர்யமில்லை!! – அமைச்சர் மனோ.தங்கராஜ்

Advertiesment
உதயநிதி துணை முதல்வரானாலும் ஆச்சர்யமில்லை!! – அமைச்சர் மனோ.தங்கராஜ்
, திங்கள், 20 டிசம்பர் 2021 (16:49 IST)
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று பேச்சு எழுந்துள்ள நிலையில் அவர் துணை முதல்வர் ஆனாலும் ஆச்சர்யமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

சமீபமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி அமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து அன்பில் மகேஷ், கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் பேசியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் “உதயநிதி துணை முதலமைச்சராக வருவது குறித்து பெரிதாக பேச அவசியம் இல்லை. அவர் அதற்கு தகுதியானவர், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்தவர். அவருக்கு ஒரு பொறுப்பு அளிப்பது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

135 வயது சீன மூதாட்டி உயிரிழப்பு!