கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை நீதிமன்றம் பாராட்டியது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக் கூறப்படும் நிலையில் பேருந்துக் கட்டணம் உயருமா எனக் கேள்வி எழுந்தது.
இதுகுறித்து இன்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளதாவது:
தமிழகப் போக்குவரத்துறையில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கள் பண்டிகைக்கு பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.