முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களை, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று ஜாமீன் கிடைத்த நிலையில், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை புழல் சிறையில் ஏராளமான திமுக தொண்டர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு 7 மணி அளவில், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவரது தரப்பில் அவரது வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களை, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோவை வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெறுவதற்காக, டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.