Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

Advertiesment
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி  உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

J.Durai

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (18:42 IST)
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி......
 
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இன்றைக்கு காலை அந்த செய்தி கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இதில் சரியாக ஒரு முடிவாக நல்ல முடிவாக கொடுத்துள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
 
இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
முதல்வர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதை ஒரு வெற்றி மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. 
 
தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு......