அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அடித்தட்டு மக்களை அதிகாரத்தில் அமர வைப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்று கூறினார்
வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி அதன்மூலம் அவர்களை அதிகாரத்தில் அமர வைப்பது திராவிட இயக்கக் கொள்கை என்று கூறினார்
மேலும் திராவிட இயக்க கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழ்நாடு பெற்றிருப்பது பெருமைக்கு உரியது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்