ரூ.3,233 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் சென்ற நிலையில் நேற்று அவர் நாடு திரும்பினார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் மூலமாக ரூபாய் 3233 கோடி மதிப்பில் ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது என்றும் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பல மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் அதனை தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
முன்னதாக சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சருக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது