Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (10:24 IST)
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும்,  ஆளுநர் மாளிகைக்கு வெளியே தெருவில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது  என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் இன்று தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் மரியாதை செலுத்தி விட்டு பேசிய போது  முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘ஆளுநர் மாளிகையில் இருந்து பொய் தகவல் பரப்பப்படுகிறது என்றும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறி வருகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
 
முன்னதாக பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் வருகை தந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை முதல்வர் ஸ்டாலின் செலுத்தினார்.
 
மேலும் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியது திமுக அரசு என முதல்வர்  ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசுவது வரவேற்கதக்கது.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

ரூ.60 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!

பெங்களூரில் தமிழ் பெண் கூட்டு பலாத்காரம்.. நீதி கேட்டு போராட்டம் நடத்தும் பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments