Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!

Advertiesment
CM Stalin
, சனி, 12 நவம்பர் 2022 (14:02 IST)
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தரும் மசோதா செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளன.
 
இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசியபோது, மாதம் ரூ.66,660 மற்றும் தினமும் ரூபாய் 2222 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? என்று கேள்வி எழுப்பினார்.
 
ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை தூக்கி விடுவது தான் சமூக நீதியே தவிர இது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்று கூறினார். 
 
பொருளாதாரரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை என்றும் சமூக கல்வி ரீதியாக வழங்குவது தான் சரியானது என்றும் அவர் கூறினார். 
 
ஜாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு பயன்படும் தத்துவம்தான் சமூக நீதிக் கொள்கை. இட ஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்று கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??