Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Siva
வெள்ளி, 5 ஜூலை 2024 (07:26 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது:
 
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
 
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவாவை தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன் அன்னியூர் சிவாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
 
திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு காலத்தில் செய்த தரப்பட்டுள்ள நலத்திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20% உள் ஒதுக்கீடு வழங்கியது, திமுக ஆட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

அடுத்த கட்டுரையில்
Show comments