Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

MK Stalin

Senthil Velan

, வியாழன், 4 ஜூலை 2024 (22:29 IST)
மக்களுடன் முதல்வர் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அழைப்பு விடுத்து அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர்ர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி அன்று, தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
 
இந்நிலையில் மேற்கண்ட நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ  மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜுலை 15 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தொடங்கி வைக்க உள்ளதாகவும், அன்றைய தினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
வரும் ஜுலை 11ம் தேதி விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும்,  மேலும் ஜுலை 15 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள மேற்படி திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாகக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், ஆதரவினை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்