அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 36-ஆவது தமிழ் விழா நடந்த நிலையில் அந்த விழாவில் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியதாவது:
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (#FeTNA), சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடத்தும் 36-ஆவது தமிழ் விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றினேன்.
"தொன்மை, தமிழரின் பெருமை" எனும் கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில் தமிழர்களின் தொன்மையை ஆய்வுப்பூர்வமாக வெளிக்கொணர நமது அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளை எடுத்துரைத்து, அயலகத் தமிழ்ச் சொந்தங்கள் தாய்த்தமிழ்நாட்டுக்கு வந்து அவற்றைக் காணவேண்டும் என அழைத்தேன்.
தமிழ் பிரிக்காது! தமிழ் வாழவைக்கும்!
தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!