இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்கிறாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (07:29 IST)
இந்தியா கூட்டணியை நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதை அடுத்து அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது.

இந்த கூட்டணியின்  முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த நிலையில் அதன் பிறகு பெங்களூரு, மும்பை நகரங்களில் நடந்தது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments