Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

Advertiesment
என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:26 IST)
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன், அதேபோல் அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் எப  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 டிசம்பர் 2 முதல் 4 வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டி தீர்த்தமழை என்பது 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
 
இந்த பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர். மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அனைத்து துறைகளும் பெயரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததால்  மக்களை காப்பாற்ற முடிந்துள்ளது. 
 
இந்த நிலையில்  முதலமைச்சரின் வாரண நிதிக்காக என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிதி நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்கள் எப்படி விபத்துகளை தவிர்ப்பது? கமிஷனர் பேட்டி!