Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திங்கள் முதல் பேருந்துகள் ஓடுமா? அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

Advertiesment
திங்கள் முதல் பேருந்துகள் ஓடுமா? அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!
, புதன், 16 ஜூன் 2021 (12:14 IST)
தமிழகத்தில் வரும் திங்கள் முதல் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் திங்கள் முதல் தமிழகத்தில் கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதுகுறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளிவரலாம் என்றும் அதற்கு முன் ஒரு மாதமாக டிப்போக்களில் நின்று வரும் பேருந்துகளை தயார்படுத்த ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டால் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விடும் என்றே மக்கள் கணித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதி! – முதல்வர் தொடங்கி வைத்தார்!