நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சமீபத்தில் ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஏற்கனவே மூன்று கட்ட ஆலோசனை முடித்துவிட்டு விரைவில் நான்காம் கட்ட ஆலோசனை நடத்த உள்ளது என்பதும் இந்த குழுவினரிடம் சுமார் ஒரு லட்சம் பேர் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீட்தேர்வு தாக்கம் குறித்த குழுவுக்கு எதிராக பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது ஏகே ராஜன் தலைமையிலான குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தியது
இந்த நிலையில் நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் ஒரு சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.