Publish Date: Thu, 21 Oct 2021 (18:32 IST)
Updated Date: Thu, 21 Oct 2021 (18:33 IST)
தமிழகத்தில் தலைவர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக 1200 க்கும் குறைவான பாதிப்பே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மேலும் சில தளர்வுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து நாளை முதல்வர் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மதுபான பார்கள் திறப்பது, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது உள்பட அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.