பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை காலமானதை அடுத்து அவரது இறுதிச்சடங்கு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தாயாரை இழந்த பிரதமருக்கு ஆறுதல் கூற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குஜராத்தில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று குஜராத் சென்று பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குஜராத் செல்வதாகவும் அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.