Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிட்ஜ் வெடித்து செய்தியாளர் குடும்பத்தோடு பலி – 3 லட்சம் இழப்பீடு வழங்கிய முதல்வர்

Advertiesment
பிரிட்ஜ் வெடித்து செய்தியாளர் குடும்பத்தோடு பலி – 3 லட்சம் இழப்பீடு வழங்கிய முதல்வர்
, வெள்ளி, 28 ஜூன் 2019 (11:36 IST)
சேலையூரில் பிரிட்ஜ் வெடித்ததில் குடும்பத்தோடு பலியான செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்துக்கு 3 லட்சம்  இழப்பீடு வழங்க உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா. ஜெ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிகிறார். நேற்று  அதிகாலை அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பிரசன்னாவின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ பரவி புகைமூட்டமாகியுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. அந்த சமயம் மின்கசிவால் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ் வெடித்து நாலா பக்கமும் தீ பரவியிருக்கிறது.

வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் தீ பரவியது வெளியே யாருக்கும் தெரியவில்லை. காலையில் வீட்டுக்கு வந்த பணிப்பெண் வீட்டிலிருந்து புகையாக வருவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் போலீஸுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் சொல்லிவிட்டு வீட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறார்கள். ஆனால் தீயில் கருகி அந்த குடும்பமே சடலமாகி கிடந்திருக்கிறது.

இதனையடுத்து உயிரிழந்த செய்தியாளர் மற்றும் அவரது குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரீன்லாந்து பனி விரிப்பின் கீழ் பதுங்கியுள்ள 50 ஏரிகள்!