Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை யாரும் வாங்காதது ஏன்? திகில் சம்பவங்கள் காரணமா?

Advertiesment
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை யாரும் வாங்காதது ஏன்? திகில் சம்பவங்கள் காரணமா?
, வியாழன், 27 ஜூன் 2019 (17:59 IST)
ஜெயலலிதா உபயோகித்த ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட்டும் யாரும் வாங்க முன்வராதது அமானுஷ்ய சம்பவங்களால்தான் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2006 ம் ஆண்டு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கினார். பெல் 412 ரக ஹெலிகாப்டரான அதில் ஒரே சமயத்தில் 11 பேர் பயணிக்கலாம். ஜெயலலிதா இறந்த பிறகு அந்த விமானம் சென்னை விமானதளத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் பாதுகாப்பு செலவை கருத்தில் கொண்டு அதை விற்றுவிடலாம் என மாநில அரசு முடிவெடுத்தது.

மிகவும் குறைந்த விலையாக 35 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட இந்த ஹெலிகாப்டரை வாங்க யாரும் முன்வரவில்லை. மீண்டும் இதை ஏலத்திற்கு விட இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை எந்த விலையையும் நிர்ணயிக்காமல் ஏலத்தை நடத்துகிறார்கள்.

ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை ஆளும்கட்சி அமைச்சர்கள் கூட உபயோகித்து கொள்ளலாம். ஆனால் அதை தொடாமல் தனியார் விமானங்களில் ஏன் பயணம் மேற்கொள்கிறார்கள் எனவும், இந்த ஹெலிகாப்டரை விற்க ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஹெலிகாப்டரை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரை குறைந்த விலைக்கு கொடுத்தும் யாரும் வாங்க முன்வராதது சில அமானுஷ்ய சம்பவங்களால்தான் எனவும் வதந்தி பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிந்துபாத் - சினிமா விமர்சனம்