சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஜூலையில் 200 லாரிகளில் விற்பனை வந்த கேரட் ஆகஸ்ட்டில் 150 லாரிகளாகவும், தற்போது 75 லாரிகள் ஆகக் குறைந்துள்ளது. கேரட் விளைச்சல் பாதிப்பு மற்றும் கேரட் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ. ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது..
மேலும், கேரட் விளைச்சல் குறைவால் இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வியாபரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலையில் 40 முதல் 43 வரை விற்பனையாக கேரட் இப்போது, ரூ.120 க்கு விற்பனையாகி வருகிறது.