Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூத்த பத்திரிக்கையாளரும்,அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி மரணம்

மூத்த பத்திரிக்கையாளரும்,அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி மரணம்
, புதன், 7 டிசம்பர் 2016 (07:54 IST)
துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும்,அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி இன்று அதிகாலை காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 82.


மறைந்த சோ, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராகவும், நெருங்கிய நட்பாகவும் இருந்தார். அதுமட்டுமின்றி 1999-2005ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

மறைந்த சோ நடிகர்,இயக்குனர்,பத்திரிக்கையாளர் , நாடக ஆசிரியர் என்று பண்முக திறமை கொண்டவர்.எம்.ஜி.ஆர்.சிவாஜி,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். 5 படங்களை இயக்கியும் உள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த முகமது பி துக்ளக் இன்றளவும் பேசப்படும் படமாக உள்ளது.

சோ ராமசாமியின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதிச்சடங்குகள் செய்த அண்ணன் மகன் தீபக்