Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிச்சடங்குகள் செய்த அண்ணன் மகன் தீபக்

Advertiesment
இறுதிச்சடங்குகள் செய்த அண்ணன் மகன் தீபக்
, செவ்வாய், 6 டிசம்பர் 2016 (18:31 IST)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது அண்ணன் மகன் தீபக் சசிகலாவுடன் இணைந்து இறுதி சடங்குகள் செய்தார்.


 

 
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 
தற்போது, அவரது உடல் அங்கிருந்து, ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, எம்.ஜி.ஆரின் சமாதி அருகிலேயே, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
முப்படை ராணுவ மரியாதையுடன் இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் இறுதிச் சடங்கு செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்களின் கண்ணீருடன் விடை பெற்றார் ’அம்மா’