Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவரும் தான் வைரமுத்துவ பத்தி வாய் திறக்கவே இல்ல.. சரவணன் அண்ணாதுரை குறித்து சின்மயி..

இவரும் தான் வைரமுத்துவ பத்தி வாய் திறக்கவே இல்ல.. சரவணன் அண்ணாதுரை குறித்து சின்மயி..

Mahendran

, சனி, 20 ஜனவரி 2024 (14:11 IST)
திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர் சிறுமியை கொடுமைப்படுத்திய குறித்து நடிகை குஷ்பு கூறிய பதிவுக்கு திமுக பிரமுகர் சரவணன் அண்ணாதுரை தனது ட்விட்டரில், ‘சொல்வது யாரென்றால் இந்தியாவின் தங்க மங்கைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ப்ரிஜ் பூஷன் சிங் பற்றி வாய் திறக்காதவர். ஏதாவது பேசினால் பதவி தப்பாது, என்பதால் பேசாதவர். வேடிக்கை. துரித நடவடிக்கை எடுத்தது திமுக அரசு! நடவடிக்கை வேண்டி போராட விட்டது பாஜக அரசு! என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாடகி சின்மயில் கூறியதாவது:
 
ப்ரிஜ் பூஷன் துன்புறுத்தின பெண்களுக்கு குறல் குடுக்குறாங்களாம். நல்லது. குடுக்கவேண்டும். நம்ம வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கணும். பாலியல் குற்றவாளிகள், மற்றும் அவர்களுக்கு துணை போகுரவங்க எவராக இருந்தாலும் ஒட்டுமொத்தமா காணாம போயிரணும் என்பதே என் 24/7 வேண்டுதல்.  
 
ஆனா - அதே பெண்கள் மேல இவங்க கவிஞர் கை வெச்சிருந்தா இவர் மட்டுமல்ல, இங்க யாரும் பேச மாட்டாங்க. அவங்க பொய் சொல்றாங்கன்னு ஆரம்பிப்பாங்க. 
 
இவரும் தான் கவிஞர் வைரமுத்துவ பத்தி வாய் திறக்கவே இல்ல. இத்தன பெண்கள் குற்றம் சாட்டிருக்கும்பொழுது, எப்பல்லாம் கவிஞர் சாஆஆஆஆஆஆஆஆருக்கு தோணுதோ, bore அடிக்குதோ, அவரு CM ஓட புகைப்படம் எடுத்து, அத இங்க share பண்ண 100 பேரு, இந்த வாழ்த்து, அந்த வாழ்த்து, புத்தக வெளியீடுன்னு தும்முனா தடுக்கி விழுந்தா இதே தான் போயிகிட்டு இருக்கு. 
 
உலகத்துலயே தனக்கு பாலியல் குற்றம் நடந்தத பத்தி முன் வந்து சொன்ன பெண்ண வேலை செய்ய விடாம, பாட விடாம கொர்ட்டுக்கும் வீட்டுகும் அலைய விட்டு Ban பண்ணுன பெறுமை தமிழ் நாட்டுக்கும், இந்த so called பெண்ணியம் பேசும் கலாசரத்துக்கு மட்டுமே சேரும். (I wonder if anyone else has been legally banned from working by a Film Industry Body like I have been for naming a molester) 
 
இவ்ளோ நடந்தும் 2 நாளா பேசப்படுற case பத்தி கூட இவங்க யாருமே பேசல
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை விட யாரும் தரக்குறைவாக பேசிவிட முடியாது: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!