தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள்!

J.Durai
வெள்ளி, 19 ஜனவரி 2024 (10:12 IST)
சிவகங்கையில் பழ வியாபாரம் செய்து வருபவரின் குழந்தைகள் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.


 
ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆறு மாநிலங்களில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினார்கள் இதில் தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காஞ்சி செல்வன், சத்யா தம்பதியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் காஞ்சி ரித்திக், எட்டாம் வகுப்பு படிக்கும் காஞ்சி லக்ஷிதா இருவரும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றனர்.

மேலும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற மற்ற வீரர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் அழைத்து பாராட்டியதுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இக்குழந்தைகளின் தந்தை காஞ்சி செல்வன் சிவகங்கையில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments