Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கி, மாமனாரை கடத்தி.. – போலீஸாரை அதிர செய்த ஆழ்வான்!

Azhvan

Prasanth Karthick

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (09:39 IST)
மனைவியை பார்த்துக் கொள்ள வந்த கொளுந்தியாளையும் கர்ப்பமாக்கிய வாலிபரின் வழக்கில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரும் விதமாக விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.



காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வான் என்ற 35 வயது நபருக்கும் சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரது முதல் மகள் சோனியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் செய்து கொண்ட சோனியா கர்ப்பமாக இருந்த நிலையில் அவரை பார்த்துக் கொள்ள அவரது இரட்டை சகோதரியான சொர்ணா அக்காள் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு சொர்ணாவுடன் ஆழ்வான் நெருங்கி பழகவே இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் சொர்ணா கர்ப்பமாகியுள்ளார். இந்த உண்மை பின்னர் சொர்ணாவின் அக்காள் சோனியாவிற்கு தெரிய வர பெரும் பிரச்சினையாகி பிறகு இருவரும் சமாதானமாகி ஒன்றாக ஆழ்வானுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.


ஆனால் சமீப காலமாக குடிப்பழக்கம் அதிகமானதால் ஆழ்வான் தினசரி குடித்துவிட்டு சோனியாவையும், சொர்ணாவையும் அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் சோனியா, சொர்ணா இருவரும் தங்கள் தாய் வீட்டிற்கே சென்று விட்டனர்.

தனிமையில் இருக்க முடியாத ஆழ்வான் சென்னை வந்து அவர்களை தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்த நிலையில் அவர்களது தந்தையான சாமுவேலை கடத்தி வைத்துக் கொண்டு, தன்னுடன் வராவிட்டால் அவரை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து இரட்டை சகோதரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் செல்போனை ட்ராக் செய்து மாதவரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சாமுவேலை மீட்டு, ஆழ்வானையும் கைது செய்தனர். விசாரணையில் சாமுவேல் கடத்தப்படவில்லை என்றும், ஆழ்வான் வாங்கி கொடுத்த மதுவை குடித்துவிட்டு அவருடன் சேர்ந்து கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஆழ்வானுக்கு சோனியா, சொர்ணாவுடன் திருமணம் ஆகும் முன்னரே ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளதும், அதை மறைத்து மீண்டும் இரண்டு திருமணம் செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாலு பேருக்கு மத்தியில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! – வாலிபர்களை வலைவீசி தேடும் போலீஸ்!