சிறுவன் சுஜித்தை அடுத்து சிறுமி ரேவதி – தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மரணம் !

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:33 IST)
திருச்சி அருகே சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித் உயிரிழந்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ரேவதி தண்ணீர் தொட்டிக்குள் உயிரிழந்தார்.

கடந்த வெள்ளியன்று திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்கும் போராட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. அரசு எந்திரம் எவ்வளவோ போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. இதையடுத்து நேற்றிரவு நள்ளிரவு 2 மணிக்கு குழிக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சுர்ஜித்தின் உடலை இரண்டு மணி நேரம் போராடி தேசிய மீட்புப்படையினர் மீட்டனர்.

சுர்ஜித்தின் மரணத்தை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் அந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு குழந்தை மரணம் நடந்துள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேசுவரன் நிஷா தம்பதிகளின் இரண்டரை வயது மகள் ரேவதி. இந்நிலையில் நேற்று தம்பதிகள் இருவரும் சுர்ஜித் சம்மந்தமான செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது குழந்தை கழிவறைத் தொட்டியில் விழுந்து மூழ்கி இறந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகங்களை உருவாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சுஜித் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கிய ஸ்டாலின்..