Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமியைக் கொன்று குளத்தில் வீசிய கொடூரன் –கைவிலங்கை உருவி போலிஸிடம் இருந்து எஸ்கேப்!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (12:57 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியைக் கொலை செய்த கொலைகாரன் போலிஸாரிடம் இருந்து தப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகூரன் மற்றும் செல்வி ஆகிய தம்பதிகளின் 7 வயது மகள் சில நாட்களுக்கு முன்னர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர் நடத்திய தேடுதலில் சிறுமியின் வீட்டருகே புதர்கள் நிறைந்த குளத்தில் சிறுமி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் உடலில் ரத்தக் காயங்கள் காணப்பட்டன.

இதையடுத்து சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜா என்ற 26 வயது வாலிபரை போலீஸார் இது சம்மந்தமாக கைது செய்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போது கைவிலங்கை உருவி விட்டு போலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments