Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே லாக் இன்னில் அனைத்து ஓடிடி தளங்களும் கிடைக்கும் – ஜியோவின் அடுத்த கட்ட பாய்ச்சல்!

Advertiesment
ஒரே லாக் இன்னில் அனைத்து ஓடிடி தளங்களும் கிடைக்கும் – ஜியோவின் அடுத்த கட்ட பாய்ச்சல்!
, வியாழன், 16 ஜூலை 2020 (12:22 IST)
ஜியோ தனது வருடாந்திர கூட்டத்தை நேற்று வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக நடத்தி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோவின் அடுத்த கட்டத்த் திட்டங்கள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆரம்பித்து நான்கே ஆண்டுகளுக்குள் தொலைதொடர்பு துறையில் நம்பர் ஒன்னாக இருக்கும் ஜியோ அடுத்த கட்டமாக சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன் படி ஜியோ டிவி, ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளாஸ், ஜியோ டிவி பிளஸ் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்த படும், ஜியோ  டிவி பிளஸ்-ல் ஒரே லாக் இன் மூலமாக அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்துக்கும் தனித்தனி லாக் இன் மூலமாக பணம் கட்டி அதன் வசதிகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021 சட்டமன்றத்தில் பாஜக இடம்பெறும்! – பாஜக தலைவர் சூசகம்!