Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனு கொடுக்க வந்த பெரியவரை... அடித்து விரட்டிய தமிழக அமைச்சர் ! வைரல் வீடியோ

Advertiesment
மனு கொடுக்க வந்த பெரியவரை... அடித்து விரட்டிய தமிழக அமைச்சர் ! வைரல் வீடியோ
, வெள்ளி, 22 நவம்பர் 2019 (20:42 IST)
பஞ்சை பராரியாக  மனு கொடுக்க வந்த உங்களை பார்க்கும்போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ மக்களை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனு கொடுக்க வந்த ஒரு பெரியவரை அமைச்சர் அடிக்கும் வீடியோவை திமுகவின் ஐடி குழு வெளியிட்டுள்ளது. 
முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம், மதுரை வடக்கு தொகுதி சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது, உங்களை பார்க்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது. பஞ்சையாய், பராரியாய் தலையில் எண்ணெய் இல்லாமல் கூட, மாவட்ட கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள்.
 
ஆண்களை விட பெண்கள் தான்  இங்கே அதிகளவில் மனு கொடுக்க வந்திருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்களுக்கு தான் ஒன்றரை மடங்கு சக்தி அதிகம். 
 
ஆனால் பெண்கள் அதனை வெளியே காட்டி கொள்ள  மாட்டார்கள். நடைபெறவுள்ள  உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு பெண்கள் போட்டியிடலாம் என்று பேசினார்.
 
அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மனு கொடுக்க மக்கள் கூட்டமாக வந்தனர். அதில், ஆவேசம் அடைந்த அமைச்சர்,ஒரு பெரியவரை,  கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்றை திமுக ஐடி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.பலர் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!