டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

Mahendran
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (14:53 IST)
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
 
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
 
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் மோதியதில் தீப்பற்றிய பேருந்து! 21 பேர் உடல் கருகி பலி! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!

மோடிக்கிட்ட பேசுனேன்.. ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்துகிறது! - ட்ரம்ப் மகிழ்ச்சி!

உக்ரைனில் போய் சண்டை போட சொல்றாங்க.. காப்பாத்துங்க! - ரஷ்யாவில் இருந்து கதறிய இந்தியர்!

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! - இன்றைய மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments