Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் – கைது செய்யாமல் காப்பாற்றுகிறதா காவல்துறை ?

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (08:28 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணைக் கன்னத்தில் அறைந்த தீட்சிதரை கைது செய்யாமல் காவல்துறைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்ற செவிலியர் நடராஜர் கோயிலுக்கு தனது மகனின் பிறந்தநாளுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தீட்சிதரிடம் தேங்காய், பழம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.  லதா தன் மகனின் பெயர் மற்றும் ராசி நட்சத்திரம் ஆகியவற்றை சொல்வதற்கு முன்பாகவே அர்ச்சகர் தேங்காயை உடைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதனால் லதா மந்திரம் கூட சொல்லாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டதை அடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார் தர்ஷன் என்ற தீட்சிதர். இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீட்சிதர் மேல் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால் தீட்சிதர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் காவல்துறை சார்பில் சொல்லப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்து 3 மணிநேரம் வரை அவர் கோயிலில்தான் இருந்ததாகவும் அதன் பின்னரே வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் காவல்துறையால் தீட்சிதரைக்  கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்லப்படுவது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் முன் ஜாமீன் எடுக்க முடியாது என்பதால் இன்றுவரை அவரைக் கைது செய்யாமல் தள்ளிப்போடேவே இந்த தலைமறைவு நாடகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments