Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் ஒர் குற்றவாளி மட்டுமல்ல.... அவர் ஒரு கோழை - ஆடிட்டர் குருமூர்த்தி

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:54 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ’ ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது  மிகவும் மோசமானது. அதைவிட அவர்  ஒரு கோழை’ என்று ஆடிட்டர் மற்றும் துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில்  சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முனைப்பாக உள்ளது. அதேசமயம் சிதம்பரம் தரபில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து தற்போது ப.சிதம்பரம் எங்கே என தெரியாத நிலையில், பல அரசியல் தலைவர்கள் இது குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி  தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : சிதம்பரம் தலைமறைவாக இருப்பது மோசமான செயலைக் காட்டுகிறது. அவர் கைது செய்யப்படுவதை காட்டிலும் இது கோழைத்தனமானது. நாங்கள் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட போது, அதை தைரியத்துடன் எதிர்கொண்டோம். ஆனால் ஏமாற்றுக்காரர் என்பதை விட அவர் கோழை என்றால் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு சிதம்பரம் ஆஜராக வாய்ப்புள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments