ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்கத்தக்கது; ப. சிதம்பரம் X தளத்தில் பதிவு

Siva
வியாழன், 4 செப்டம்பர் 2025 (08:01 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை வரவேற்றாலும், அவற்றை செயல்படுத்த 8 ஆண்டுகள் எடுத்தது மிகவும் தாமதமானது என்று விமர்சித்துள்ளார். மத்திய அரசின் இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மந்தமான பொருளாதார வளர்ச்சியா, வீட்டுக்கடன் அதிகரிப்பா, வீட்டு சேமிப்பு குறைவா, அல்லது வரவிருக்கும் தேர்தல்களா என பல காரணங்களை அடுக்கி கேள்விகளை எழுப்பினார். மேலும், "டிரம்பின் வரிவிதிப்பா அல்லது இவை அனைத்துமா?" என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வரி சீர்திருத்தங்கள் குறித்து பல ஆண்டுகளாகக்கோரிக்கைகள் இருந்தபோதிலும், இப்போதுதான் மத்திய அரசு அதை செயல்படுத்த முன்வந்திருப்பதாக ப. சிதம்பரம் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments