Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பீதி : கோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் !

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (19:13 IST)
கோழிக்கறி விற்பனைக்காக ... சில்லி சிக்கன் இலவசம் !

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், தமிழகத்திலுள்ள விழுப்புரத்தில் இறைச்சி விற்பனை நிலையங்கள் பொதுமக்களுக்கு சில்லி சிக்கனை இலவசமாக வழங்கினர். கோழி சாப்பிடுவதால் பாதிப்பில்லை என்பதை தெரிவிக்கவே விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.  சமீபகாலமாக, கொரொனா வைரஸ் கோழியில் இருந்து பரவுவதாக வதந்தி பரவிய நிலையில், கோழி விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments